த்ரிஷாவின் இன்னொரு முகத்தை காட்டப்போகும் ‘நாயகி’..!

கதாநாயகிகள் எல்லோருக்குமே தன்னை மட்டுமே மையப்படுத்திய படம் ஒன்றிலாவது நடித்துவிடவேண்டும் என்கிற கனவு நிச்சயம் இருக்கும்.. நயன்தாரா அந்த பாதையில் எப்போதோ பயணிக்க துவங்கிவிட்டார்.. ஆனால் த்ரிஷாவிற்கு மட்டும் அது வெறும் கனவாக இருந்தது கடந்த வருடம் வரை. ஆனால் நாளை மறுநாள் வெளியாகப்போகும் ‘நாயகி’ படம் அந்த கனவை நனவாக்கிவிட்டது என்று சொல்லலாம்.

ஆம் முழுக்க முழுக்க த்ரிஷாவை மையப்படுத்தி கதை அமைக்கப்பட்டு உருவாகியுள்ள படம் தான் நாயகி. தன்னிடம் ஏழு வருடத்திற்கு முன்புவரை மேனேஜராக இருந்த கிரிதர், ஒரு படம் தயாரிக்கப்போகிறேன், நீங்கள் தான் நடிக்கவேண்டும் என்றதும் உடனே ஒப்புக்கொண்டு படபிடிப்புக்கு கிளம்பினார் த்ரிஷா. அதுதான் ‘நாயகி’ படமாக உருவாக உள்ளது. இந்தப்படத்தை கோவி என்பவர் இயக்கியுள்ளார்.

ஹாரர் படமான இதில் ‘அபியும் நானும்’ படத்தை தொடர்ந்து த்ரிஷாவுடன் இணைந்து இந்தப்படத்தில் நடிக்கிறார் கணேஷ் வெங்கட்ராம். கூடவே கோவை சரளா, ஜெயபிரகாஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.. இந்தப்படம் தொடர்பாக இதுவரை வெளியான, கத்தியுடன் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் த்ரிஷாவின் போஸ்டர்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இருமடங்காக்கி உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை த்ரிஷாவின் ரசிகர்களுக்கும் ஹாரர் பட பிரியர்களுக்கும் ஒரு திருவிழா கொண்டாட்டம் காத்திருக்கிறது போங்கள்..

அதேபோல தேனாண்டாள் பிலிம்ஸ் ஒரு படத்தை வெளியிட்டால், குறிப்பாக ஹாரர் படம் என்றால் அது ஹிட் என்பது எழுதப்படாத விதி. அந்தவகையில் இந்தப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுவது படத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க செய்திருக்கிறது.. வரும் வெள்ளிக்கிழமை த்ரிஷாவின் ரசிகர்களுக்கும் ஹாரர் பட பிரியர்களுக்கும் ஒரு திருவிழா கொண்டாட்டம் காத்திருக்கிறது போங்கள்..