பரத் படத்தில் வெங்கட் பிரபு – பிரேம்ஜி ; கூடவே த்ரிஷா..?

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்க்கும் எல்லோருக்கும் அந்த ஐந்தறிவு ஜீவன்களுடன் அவர்களுக்கே பிரத்யேகமான ஒரு மொழியியல் பறிமாற்றமும் இருக்கும். இதைத்தான் புதிதாக உருவாகிவரும் ’சிம்பா’ படத்தின் அறிமுக இயக்குனர் அர்விந்த் ஸ்ரீதர் தனது வித்தியாசமான திரைக்கதையில் பிளாக் ஹ்யூமர் காமெடி முறையில் அட்டகாசமாக சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமல்ல, தனிமையினால் வாழ்க்கை திசைமாறி எப்போதுமே பிரம்மையில் உழலும் ஒருவனின் உலகம் எப்படி இருக்கும் என்பதையும் இயக்குனர் தனது சிறப்பான காட்சியமைப்புகள் மூலம் பிரம்மிக்க வைக்கும்படியாக சொல்லியிருக்கிறார்.

படத்தின் ஹீரோவாக நடிப்பது பரத் தான். கதாநாயகியாக தெலுங்கில் ஹிட்டடித்த வருடு பட நாயகி பானு மெஹ்ராவும், இன்னுமொரு முக்கிய கதாபாத்திரத்தில் ரமணாவும் நடித்திருக்கிறார்கள். படம் முழுவதும் பரத்துடன் ட்ராவல் பண்ணும் வித்தியாசமான கேரக்டரில் பிரேம்ஜி அமரன் நடிக்கிறார்.

இதுதவிர சிறப்புத்தோற்றத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும், மிருகங்களை நேசிக்கும் ஒரு பிரபல தமிழ் சினிமா ஹீரோயினும் நடிக்க இருக்கின்றனர். ஹீரோயின் யார் என்பது சஸ்பென்ஸ் என்கிறார்கள்.. ஒருவேளை த்ரிஷாவாக இருக்குமோ..?