மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் பின்னணியில் உருவாகும் த்ரிஷாவின் படம்.!

trisha-2

இனியும் கதாநாயகர்களோடு டூயட் பாடியது போதும் என த்ரிஷா நினைத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.. அவர் நடிக்கும் படங்களையும் அவரது கேரக்டர்களையும் பார்த்தால் அப்படித்தான் நினைக்க தோன்றுகிறது. ‘கொடி’ படத்தில் சூப்பர் வில்லியாக நடித்த த்ரிஷா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் மோகினி, நாயகி போன்ற படங்களில் நடித்து வருகிறார்..

இதை தொடர்ந்து 1818 என்கிற படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். இதில் சுமன், ராஜேந்திர பிரசாத், பிரம்மானந்தம், சூது கவ்வும் ரமேஷ் திலக், ராஜா ராணி படத்தில் நடித்த மீரா கோஷல் ஆகியோர் நடிக்கிறார்கள். மும்பை தீவிரவாதிகளால் முற்றுகையிடப்பட்டு பலர் கொல்லப்பட்ட பரபரப்பான சம்பவங்களை கதைக்களமாக்கி விறுவிறுப்பான படமாக உருவாக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இயக்குனர் ரிதுன்சாகர்.

இந்தப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் பிரமாண்டமாக தயாராகிறது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.