‘சோலோ’ இசையை கைப்பற்றிய ட்ரெண்ட் மியூசிக்..!

solo music rights

கடம்பன், சண்டி வீரன், தர்மதுரை, ஸ்ட்ராபெர்ரி, விழித்திரு ஆகிய படங்களை தொடர்ந்து ட்ரெண்ட் மியூசிக் நிறுவனம் மிகவும் எதிர்பார்புக்குள்ளாகி இருக்கும் துல்கர் சல்மானின் சோலோ படத்தின் தமிழ் மற்றும் மலையாள இசை உரிமையை கைப்பற்றியுள்ளது.

25 ஆண்டு மீடியாவில் கொடி கட்டி பறந்து வரும் விஷன் டைம் இந்தியா நிறுவனத்தின் டிஜிட்டல் பிரிவு தான் ட்ரெண்ட்லௌட். இந்த டிரெண்ட்லௌட் நிறுவனத்தின் ஒரு அங்கம் தான் டிரெண்ட் மியூசிக். இசைஞானி இளையராஜாவின் ஒட்டு மொத்த டிஜிட்டல் தொகுப்புக்கான பிரதிநிதித்துவத்தையும் பெற்றுள்ளது இந்த நிறுவனம் தான்.

இயக்குனர் பிஜாய் நம்பியார் ரசிகர்களின் ரசனைக்கு தீனி போடும் படமாக இந்த சோலோ படத்தை கொடுக்கும் வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் தனித்துவம் மிக்கவை. துல்கரின் ருத்ரா கேரக்டரை அடுத்த கட்டத்துக்கு தூக்கி செல்ல 11 இசையமைப்பாளர்களோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார் இயக்குனர் பிஜாய் நம்பியார்.

இந்த படத்தில் நிலம், நீர், காற்று மற்றும் நெருப்பு என நான்கு முக்கிய ஆதாரங்களை சுற்றி நான்கு வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார் துல்கர். கொச்சியில் துல்கரின் ரசிகர்களுக்காக ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தும் வேலைகளில் இருக்கிறது படக்குழு. செப்டம்பரில் படத்தை வெளியிட இருக்கிறார்கள்.