டி.ராஜேந்தரை வசப்படுத்திய கே.வி.ஆனந்த்..!

kv anand new film
நேற்று ஏ.ஜி.எஸ் நிறுவனம் தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து இப்போதுவரை ரசிகர்கள் பலருக்கும் ஆச்சர்யம் விலகவே இல்லை.. கே.வி.ஆனந்த் டைரக்சனில் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பதே புதுசுதான் என்றாலும் அதையும் தாண்டி இந்தப்படத்தில் டி.ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பதுதான் ஹாட் டாபிக்காக மாறிப்போனது.

தனது டைரக்சனில் உருவாகும் படங்களை தவிர வேறு படங்களில் நடிப்பதே இல்லை என்பதை கொள்கையாகவே வைத்திருப்பவர் டி.ஆர்.. ஆனால் இயக்குனர் கே.வி.ஆனந்த் அவரையே கதைசொல்லி வசப்படுத்தி ஒப்புக்கொள்ள வைத்துவிட்டார் என்றால் அது அதிசயத்திலும் அதிசயமான சாதனை தான்.