மொத்தம் 6 படங்கள் ; களைகட்டும் டிச-21

christmas release

தமிழக சினிமா வரலாற்றில் முதன் முறையாக பல வருடங்களுக்கு பிறகு ஒரு ஆச்சரியமான நிகழ்வு நடைபெற இருக்கிறது வரும் டிசம்பர் 20-21 ஆகிய தேதிகளில் அதாவது இந்த வாரம் மொத்தம் 6 படங்கள் ரிலீசாக இருக்கின்றன ஆறுமே கிட்டத்தட்ட பெரிய படங்கள் தான்

இதில் விஜய் சேதுபதியின் சீதக்காதி, ஜெயம் ரவியின் அடங்க மறு, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா, கன்னட ஹீரோ நடித்து தமிழில் வெளியாகும் கே.ஜி.எஃப், தனுஷின் மாரி-2, விஷ்ணு விஷால் நடித்துள்ள சிலுக்குவார் பட்டி சிங்கம் ஆகிய ஆறு படங்கள் தான் இந்த வாரம் மோதுகின்றன

தொடர்ந்து கிறிஸ்துமஸ் விடுமுறையாக 5 நாட்கள் வருவதாலும் மேலும் மாணவர்களுக்கு தேர்வு விடுமுறை என அனைத்தும் சேர்ந்து வருவதால் தங்களது படங்களை எப்படியாவது லாபகரமாக ஓட்டி விடலாம் என்கிற கணக்கில் ஒவ்வொருவரும் தங்களது படங்களை தில்லாக வெளியிடுகிறார்கள் இந்த போட்டியில் எல்லோருக்கும் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதே நமது எண்ணம்.