நாளை ‘நான் சிகப்பு மனிதன்’ ட்ரெய்லர் வெளியீடு..!

சில தினங்களுக்கு முன்புதான் விஷால் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் ட்ரெய்லர் வெளியீட்டை மட்டும் தள்ளிவைத்திருந்தார்கள்.

இந்தப்படத்தில் விஷால் அடிக்கடி தூங்கிவிடும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனால் படம் எப்படி இருக்குமென்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. அந்த எதிர்பார்ப்பே ட்ரெய்லரை பார்க்கும் ஆவலையும் அதிகப்படுத்தியுள்ளது..

அவர்கள் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக நாளை முதல் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகிறது. முழுப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் முடித்துவிட்ட படத்தின் இயக்குனர் திரு இன்னும் ஓரிரு தினங்களில் படத்தை சென்சார் குழுவினருக்கு திரையிட்டுக் காட்ட இருக்கிறார். படம் ஏப்ரல்-11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.