இன்று துவங்கியது ‘தல’ படம் மட்டும் அல்ல.. பட்டிமன்றமும் தான்..!

அஜித் – கௌதம் வாசுதேவ் மேனன் என்கிற ஹைடெக் காம்பினேஷனில் புதிய படம் இன்று பூஜையுடன் இனிதே துவங்கியுள்ளது. அதுவும் மெகா பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் வல்லவரான ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில். ஹீரோயினோ ஆறடி அரபுக்குதிரையான அனுஷ்கா.

படம் ஆரம்பித்துவிட்டது சரி.. படத்திற்கு டைட்டில்..? தற்போதைக்கு ‘தல-55’ என்பது மட்டும் தான். இனிமேல் தான் பெயர் வைப்பார்கள். அதனால் ஏற்கனவே ‘ஆரம்பம்’, ‘வீரம்’ படங்களுக்கு இதேபோல பெயர் வைக்கப்படுவதற்கு முன் நாம் என்ன செய்தோம். விதவிதமான பெயர்களை வைத்து இதுதான் டைட்டில் என பட்டிமன்றம் நடத்தினோம் இல்லையா..? அதையேதான் இப்போதும் செய்ய ஆரம்பிக்கவேண்டும்.

இதற்குமுன் இந்த புராஜெக்ட்டுக்கு ‘துப்பறியும் ஆனந்த்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் காற்றுவாக்கில் உலாவிக்கொண்டு இருந்ததே கவனித்தீர்களா..? ஒருவேளை அதுதான் டைட்டிலாக இருக்குமோ..?