‘தொண்டன்’ படத்திலிருந்து ‘வி.ஐ.பி-2’வுக்கு தாவிய சமுத்திரக்கனி..!

samuthrakani

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷின் அப்பாவாக சமுத்திரக்கனிக்கு மிக முக்கியமான ரோல் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை சிறப்பாகவே செய்து முடித்தார். அந்தவகையில் சௌந்தர்யா இயக்கத்தில் உருவாகும் அந்தப்படத்தின் இரண்டாம் பாகமான ‘வி.ஐ.பி-2’ விலும் சமுத்திரக்கனி தொடர்கிறார்..

தற்போது அரசியல் பின்னணியுடன் கூடிய ‘தொண்டன்’ படத்தை இயக்கிவருகிறார் சமுத்திரக்கனி.. இந்தப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.. இதனை தொடர்ந்து இன்றுமுதல் ‘வி.ஐ.பி-2’ படத்தின் படப்பிடில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.