மகனுக்காக தானே களத்தில் இறங்கிய தம்பிராமையா..!

ulagam vilaikku varuthu

நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். அந்தப்படத்தை விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை இயக்கிவந்த இன்பாசேகரன் இயக்கினார். படம் பெரிய அளவில் உமாபதிக்கு வரவேற்பை தரவில்லை என்பதே உண்மை.. அதனால் இந்தமுறை தானே களத்தில் இறங்கி மீண்டும் டைரக்சன் தொப்பியை அணிந்துள்ளார் தம்பிராமையா.

அதற்காக பல முன்னணி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் தம்பிராமையா 4 மாதங்கள் தனது நடிப்பு வேலைகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு முழு வீச்சில் தன் மகன் உமாபதி நடிக்கும் “உலகம் விலைக்கு வருது” படத்தை இயக்கி வருகிறார். இதில் பகத் பாசிலுடன் கதாநாயகியாக நடித்த மிருதுளா முரளி நடிக்கிறார்.

இவர்களுடன் ஜெயப்பிரகாஷ், சமுத்திரகனி, ராதாரவி, விவேக் பிரசன்னா, YG மகேந்திரன், பவன், நான் கடவுள் ராஜேந்திரன், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், சிங்கம்புலி, சாமிநாதன், ஸ்ரீஜா ரவி, ஸ்ரீரஞ்சனி, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் மலையக்கோயில் கிராமத்தில் உள்ள மலைக்கோயில் 7ம் நூற்றாண்டின் முருகன் கோயிலில் பூஜையுடன் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டு முதல் நாள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. தப்பட்டம் மயிலாட்டம் புலியாட்டம் பொய்க்கால் குதிரை, கரகாட்டம் என நூற்றுக்கணக்கான கிராமியக்கலைஞர்கள் 4 கேமராக்களுடன் தினேஷ் அவர்களின் நடன வடிவமைப்பில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை, அம்பாசமுத்திரம், தென்காசி, குற்றாலம் ஆகிய இடங்களில் படமாக்கப்படுகிறது.