விஷாலின் மணப்பெண் இவர் தான்; அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் விஷால் தனது திருமணம் எப்போது நடைபெறும் என்பதை சூசகமாக பலமுறை கூறிவிட்டார். மணப்பெண் யார் என்பதை மட்டும் சஸ்பென்சில் வைத்திருந்தார். இந்த நிலையில் அவர் இந்த பெண்ணை தான் திருமணம் செய்யப் போகிறார் என கூறி ஒரு பெண்ணின் புகைப்படத்துடன் இணைத்து தவறான செய்திகளை சிலர் வெளியிட்டு வந்தார்கள்.

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் குறித்து புகைப்படத்துடன் அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிட்டுள்ளார் விஷால். மணப்பெண் பெயர் அனிஷா. ஆந்திராவில் உள்ள பிரபல தொழிலதிபரின் மகள். தங்கள் திருமணம் குறித்தும் விரைவில் தேதி அறிவிப்பேன் என கூறியுள்ளார் விஷால்.