‘திருட்டுப்பயலே-2’ செகண்ட் லுக்கை வெளியிட்டார் விஜய்சேதுபதி..!

ThiruttuPayaley2 Second Look Poster

தமிழில் ‘கந்தசாமி’ படத்துக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இந்திப்பக்கம் போயிருந்த சுசி கணேசன் தற்போது ‘திருட்டுப்பயலே-2’ மூலம் மீண்டும் தமிழ்சினிமாவில் பரபரப்பாக இயங்கி வருகிறார். தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தை மறக்க முடியுமா என்ன..? இந்தப்படத்தில் வில்லத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்த ஜீவனுக்கு இந்தப்படம் தான் திருப்பு முனையாக அமைந்தது..

அந்தவகையில் தற்போது உருவாகி வரும் ‘திருட்டுப்பயலே-2’வும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடிக்க இருக்கிறார்கள். அமலாபால் கதாநாயகியாக நடிக்கிறார். திருட்டுப்பயலே படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் தான், தனது ஏ.ஜி.எஸ் நிறுவனம் மூலமாக இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.

இன்று இந்தப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி தனது பேஸ்புக் பக்கம் வாயிலாக வெளியிட்டுள்ளார்.