‘திருட்டுப்பயலே-2’ ரிலீஸ் தேதி மாற்றம்..!

ThiruttuPayale 2 release date 3

சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘திருட்டுப்பயலே-2’ படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் வரும் டிச-1ஆம் தேதி வெளியாவதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது

இந்தநிலையில் தற்போது ஒருநாள் முன்னதாக ‘திருட்டுப்பயலே 2’ படம் நவம்பர்-30ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் – சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப்பயலே திரைப்படம் வசூலில் சாதனைப்புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது