‘திருட்டுப்பயலே’ 2ஆம் பாகத்தை தொடங்கினார் சுசி கணேசன்..!

Thiruttupayale Part2 Movie Will Be Start
தமிழில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான ‘திருட்டுப்பயலே’ படத்தை மறக்க முடியுமா என்ன..? சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் வில்லத்தனம் கலந்த கதாநாயகனாக நடித்த ஜீவனுக்கு இந்தப்படம் தான் திருப்பு முனையாக அமைந்தது.. இந்தப்படத்தின் வெற்றி காரணமாக இதை இந்தியில் ஷார்ட் கட்’ ரோமியோ என்கிற பெயரிலும் இயக்கினார் சுசி கணேசன்..

தமிழில் ‘கந்தசாமி’ படத்துக்குப்பின் சற்று இடைவெளிவிட்டு இந்திப்பக்கம் போயிருந்த சுசி கணேசன் தற்போது திருட்டுப்பயலே-2’ மூலம் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாகவும் பிரசன்னா வில்லனாகவும் நடிக்க இருக்கிறார்கள். திருட்டுப்பயலே படத்தை தயாரித்த கல்பாத்தி அகோரம் தான், தனது ஏ.ஜி.எஸ் நிறுவனம் மூலமாக இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.