கடலோர கவிதைகள் பாணியில் ‘திருநாள்’ கேரக்டர்கள்..!

முப்பது வருஷத்துக்கு முன்னாடி என்று ஒரு பிளாஸ்பேக்கை ஆரம்பித்துதான் ஆகவேண்டும்.. விஷயம் இருக்கிறது.. பாரதிராஜா இயக்கத்தில் சத்யராஜ், ரேகா நடித்த ‘கடலோர கவிதைகள்’ பாணியில் தனது பட நாயகன் நாயகி கேரக்டர்களை வடிவமைத்துள்ளார் ‘திருநாள்’ பட இயக்குனர் பி.எஸ்.ராம்நாத்..

ஜீவாவும் நயன்தாராவும் எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தின் கதை கும்பகோணத்தில் நடக்கிறதாம். இதில் ஜீவா லோக்கல் ரவுடியாகவும் நயன்தாரா நர்சரி ஸ்கூல் டீச்சராகவும் நடிக்கிறார்களாம். கடலோர கவிதைகள் படத்தில் ரேகா ஸ்கூல் டீச்சராகவும், சத்யராஜ் உள்ளூர் ரவுடியாகவும் நடித்தது இங்கே குறிப்பிடத்தக்கது.