தம்பி ராமையாவின் மகனை கைதூக்கி விடும் சேரன்

thirumanam

சேரன், தற்போது சத்தமில்லாமல் ஒரு படத்தை இயக்கி முடித்துவிட்டார். படத்தின் பெயர் திருமணம். தம்பி ராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க, வழக்கம்போல கேரளாவை சேர்ந்த கவிதா சுரேஷ் என்பவரை நாயகியாக்கியுள்ளார் சேரன். மேலும் சேரனும் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, சுகன்யா, பாலசரவணன் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சித்தார்த் விபின் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒரு திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமணம் முடியும் வரை உள்ள நிகழ்வுகளே படத்தின் கதை.

இந்தப்படத்தின் டைட்டிலையும் படக்குழுவினரையும்தை இன்று சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த விஜய்சேதுபதி மற்றும் சமுத்திரகனி இருவரும் அறிமுகப்படுத்தி வைத்தனர்.