திருடன் போலீஸை விடாமல் துரத்திய ‘குக்கூ’வின் பாதிப்பு..

 

‘அட்டகத்தி’ தினேஷ் தற்போது தான் நடித்துள்ள ‘திருடன் போலீஸ்’ படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார். கார்த்திக் ராஜூ என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார் தினேஷ். அவருக்கு ஜோடியாக ரம்மி’ ஐஸ்வர்யா நடித்துள்ளார்.

‘குக்கூ’ படத்தை முடித்த அடுத்த நான்கு நாட்களிலேயே இந்தப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தினேஷுக்கு ‘குக்கூ’ படத்தின் பாதிப்பு சில நாட்கள் தொடர்ந்ததாம். அதாவது குக்கூ’ படத்தில் கண் பார்வையற்றவராக அவர் நடிக்கவேண்டி இருந்ததால் டைரக்டர் ஆக்ஷன் என்று சொன்னதும் கண்களை மூடிக்கொள்வது ஒரு பழக்கமாகவே ஆகியிருந்தது தினேஷுக்கு.

அதேபோல இந்தப்படத்தில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்களுக்கு டைரக்டரின் ஆக்ஷன் என்கிற குரலை கேட்டதும் அதேபோல கண்களை மூடிக்கொள்ள, அதனாலேயே பல காட்சிகள் ரீடேக் எடுக்கவேண்டி இருந்ததாம். ஆனாலும் இயக்குனரும் உடன் நடித்தவர்களும் அந்த பாதிப்பு எதனால் என்பதை உணர்ந்து பெருந்தன்மையுடன் ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்.