வசனகர்த்தாவாக மாறிய ‘தில்லுமுல்லு’ ஹீரோ.!


இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் கிரிக்கெட்டுங்கறது ஒரு மதம் மாதிரி. அந்த அளவுக்கு கிரிக்கெட்டுங்கறது இங்க ரொம்ப ஆழமான, ஆர்வமான ஒரு விளையாட்டா சின்னப் பசங்ககிட்ட கூட பரவியிருக்கு. அந்தவகையில கிரிக்கெட்டை மையமா அச்சு எடுக்கப்படுற படங்கள் ரசிகர்களை ஈஸியா தியேட்டருக்கு கூட்டிட்டு வந்துருது.

அதனால தான் வீராப்பு, தில்லுமுல்லு படங்களை இயக்குன பத்ரியும் இப்ப கிரிக்கெட்டை மையமா வச்சு ஒரு படம் இயக்கிட்டு வர்றாரு.. பத்ரி இதுக்கு என்ன காரணம் சொல்லுறார்னு கேட்கலாமா..?

இன்னைக்கு ஜெயிக்கிறவனுக்கு ‘கோப்பை’ கிடைக்குதோ இல்லையோ, தோற்கிறவனுக்கு கட்டாயம் நிறைய பணம் கிடைக்குது. ‘ஆடாம ஜெயிச்சோமடா’ங்கறது கிரிக்கெட் ஊழலை மையமாக வைத்து, அதோடு பல சுவாரசியமான கற்பனை சம்பவங்கள், பல கற்பனை கதாபாத்திரங்கள், இது எல்லாத்தையும் சேர்த்து மக்களை சிரிக்க வைக்கணும்கற ஒரே நோக்கத்தோட உருவாக்கியிருக்கிறோம்.

‘சூது கவ்வும்’ புகழ் கருணாகரன், ‘நேரம்’, ‘ஜிகர்தண்டா’ புகழ் சிம்ஹா , பாலாஜி, ‘‘சென்னை 28’, அஞ்சாதே” புகழ் விஜயலட்சுமி, ‘ஆடுகளம்’ நரேன், ராதாரவி, விச்சு, சித்ரா லட்சுமணன், சேத்தன், அபிஷேக் இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்திற்கு எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் பேரன் ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளதுடன் ஒரு பாடலையும் எழுதியிருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டராக ‘தளபதி’ தினேஷ் மகன் ஹரி தினேஷ் அறிமுகமாகிறார்.

இன்னொரு ஆச்சர்யப்படத்தக்க விஷயமாக தமிழ் படம், சென்னை-28 படங்களின் நாயகன் சிவா இந்தப்படத்திற்கு வசனம் எழுதி, வசனகர்த்தாவாக அறிமுகமாகிறார். படத்தின் இசை வெளியீட்டை ஏப்ரல் மாதமும், படத்தை மே மாதம் கோடை விடுமுறையில் வெளியிடவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>