அப்போ தெறி பேபி.. இப்போ டார்லிங்..?

bairava-vijay-1

புத்தாண்டு கிப்ட்டாக தனது ரசிகர்களுக்காக ‘பிறவா’ படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டார் விஜய்.. ரசிகர்களை கவரும் அம்சங்கள் நிறைந்துள்ள இந்த ட்ரெய்லரில் இன்னும் ஏதாவது விசேஷம் இருக்காதா என பூதக்கண்ணாடியை வைத்து தேடிய சில ரசிகர்கள் ஒரு உண்மையை கண்டுபிடித்துள்ளார்கள்..

அதாவது ‘பைரவா’ ட்ரெய்லரில் சரியாக 22வது நொடியில் விஜய்யிடம் சதீஷ், “லவ்ல என்ன ‘டார்லிங்’ பெரிய டிரெண்ட்டு, அன்னைக்கு முரளி லெட்டர்ல சொன்ன காதல, அவர் பையன் அதர்வா இன்னைக்கு ட்விட்டர்ல சொல்றாரு”னு சொல்லுவார். அடுத்து, டிரெய்லரின் 57வது நொடியில் ஒரு குழந்தை, “டார்லிங்” என கத்திக்கொண்டே ஓடிவந்து விஜய்யை கட்டிப்பிடிக்கும்.

ஆகவே இதன்மூலம் ‘பைரவா’ படத்தில் விஜய்யின் செல்லப்பெயர் ‘டார்லிங்’ என்பதை கண்டுபிடித்துவிட்டதாக சோஷியல் மீடியாவில் பரப்பி வருகின்றனர். அப்போ தெறி பேபி.. இப்போ டார்லிங்கா..?