‘தெறி’யில் ஒரு பாடல் ; விஜய்யுடன் நட்பை இறுக்கும் டி..ராஜேந்தர்..!

t.r in theri

வாலு பட ரிலீஸ் தொடர்பான பிரச்சனைகளில் விஜய் தலையிட்டு உதவி செய்ததில் இருந்து கிட்டத்தட்ட விஜய்க்கு தீவிர ரசிகனாகவே டி.ராஜேந்தர் மாறிவிட்டார் என சொல்லலாம்.. அதை வெளிக்காட்டும் எந்த ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் அதில் பளிச்சென தனது அன்பையும் நட்பையும் வெளிப்படுத்த டி.ஆர் தயங்குவதே இல்லை..

‘புலி’ ஆடியோ ரிலீசில் கலந்துகொண்டு அடுக்குமொழியில் விஜய்யை பாராட்டிய டி.ஆர், அடுத்ததாக ‘புலி’ பட ரிலீஸில் சிக்கல் ஏற்பட்டபோது இரவு பகலாக அந்த தயாரிப்பாளர்களுடன் பிரச்சனை முடியும் வரை துணை நின்றார்.. அப்போது பி.டி.செல்வகுமாருடன் ஏற்பட்ட நட்புக்காகத்தான் இப்போது அவர் தயாரித்துள்ள ‘போக்கிரி ராஜா’ பட ரிலீஸ் பிரச்சனையிலும் தலையிட்டு சமரசம் செய்து வைத்தார்..

இப்போது விஜய்யுடன் நட்பை இன்னும் பலப்படுத்தும் விதமாக அட்லி டைரக்சனில் விஜய் நடித்துள்ள ‘தெறி’ படத்தில் ‘உலக தர லோக்கல் டிக்கெட்’ என்கிற பாடலை ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடியுள்ளார். இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் மார்ச்-20ல் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.