“என் கதையில் லாஜிக் கிடையாது” – அறிமுக இயக்குனரின் துணிச்சல்

“நல்ல கதை ஜெயிக்கிற விஷயங்களில், லாஜிக் எல்லாம் பக்காவாக இருக்கும். யாரும் கேள்வியே கேட்க முடியாது. ஆனால் என் படத்தில் லாஜிக் என்று ஒன்றை தேடினால் கிடைக்காது நகைச்சுவை தான் என் குறிக்கோள்” என்கிறார் அது வேற இது வேற’ படத்தின் கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் எம்.திலகராஜன்

சென்னைக்கு எவ்வளவோ பேர் என்னென்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள். ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் “அதுவேற இதுவேற”. இந்தப்படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சானியாதாரா நடிக்கிறார்.

இவர்களுடன் இமான் அண்ணாச்சி, கஞ்சாகருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள். இதில் இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.

பாடல்களை நா.முத்துக்குமார் எழுத படத்திற்கு இசையமைத்திருப்பவர் தாஜ்நூர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.திலகராஜன். படம் பற்றி இயக்குனரிடம் கேட்டால், “படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் இரண்டு மணி நேரம் சந்தோஷமாக சிரித்துவிட்டு செல்ல வேண்டும்.. அவ்வளவுதான்” என்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>