‘பாகுபலி’யை மெகா ரிலீஸ் செய்யும் தேனாண்டாள் பிலிம்ஸ்..!

சமீபத்தில் குழந்தையை கையில் வைத்திருப்பது போல வெளியிடப்பட்ட ‘பாகுபலி’ படத்தின் போஸ்டரைக் கண்டு ஆச்சர்யப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இரண்டு வருடத்திற்கும் மேலான கடின உழைப்பு மிகப்பிரமாண்டமான படைப்பாக உருவாகி இருக்கிறது.

பிரபாஸ், ராணா, சுதீப், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல நட்சத்திர கலைஞர்களின் நடிப்பில் நவீன தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்தப்படம் வரும் ஜூலை 1௦ஆம் தேதி வெளியாகிறது. குறிப்ப்பிடத்தக்க முக்கியமான விஷயம் இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்ல… இந்தப்படம் இந்தி, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மற்ற மொழிகளுக்கும் அதே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகவிருக்கிறது. முதலில் இந்தப்படத்தை தமிழில் வெளியிடும் உரிமையை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் கைப்பற்றியது. இப்போது அந்நிறுவனத்திடம் இருந்து தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கி, மெகா ரிலீஸ் செய்ய இருக்கிறது.