தீரன் அதிகாரம் ஒன்று தீபாவளிக்கு ரிலீஸ்…!

‘சதுரங்க வேட்டை’ இயக்குனர் வினோத் டைரக்சனில் தீரன் ; அதிகாரம் ஒன்று என்கிற படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.. ஆக்சன் கதையாக உருவாகும் இந்தப்படத்தில் ஒரு சிறிய இடைவெளிக்குப்பிறகு மீண்டும் போலீஸ் யூனிபார்ம் அணிந்துள்ளார் கார்த்தி. ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஹீரோவுக்கு செம டப் கொடுக்கும் விதமாக வில்லன் கேரக்டரில் தலைவா, ரத்த சரித்திரம், பத்து எண்றதுக்குள்ள படங்களில் வில்லனாக மிரட்டிய அபிமன்யு சிங் நடிக்கிறார்.. இந்தப்படத்தை வரும் தீபாவளி ரிலீசாக வெளியிடுவதாக இப்போதே அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். கடந்த வருடம் கார்த்தி நடித்த ‘காஷ்மோரா’ படமும் தீபாவளி தினத்தில் தான் ரிலீஸானது என்பது குறிப்பிடத்தக்கது.