கஜா புயல் பாதிப்பு – கைகொடுக்கும் தமிழ் திரையுலகம்

தமிழகத்தில் கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப் போட்டிருக்கிறது. நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்று வீசியுள்ளதால் வாழ்வாதாரங்களாக விளங்கிய மரங்கள் பேரழிவுக்கு ஆளாகியுருக்கின்றன.

புயல் மற்றும் கனமழை காரணமாக பலர் உயிரிழந்திருக்கின்றனர். இது தொடர்பாக வரும் புகைப்படங்கள் யாவுமே நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது பங்களிப்பாக 5௦ லட்ச ரூபாய் மதிப்புள்ள நிவாரண உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார். இதற்கான பணிகளை ரஜினி மக்கள் மன்றத்தினர் மேற்கொள்ள இருகின்றனர்.

அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகியோர் இணைந்து மொத்தமாக 50 லட்சம் ரூபாய் நிவாரணமாக கொடுத்திருக்கிறார்கள். இதனை அப்பகுதிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் என்ன உதவிகள் தேவை என்பதை தெரிந்து செய்யவுள்ளார்கள்.

அதேபோல விஜய் தனது ரசிகர் மன்றங்களுக்கு பணம் அனுப்பி புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பணிகளை மேற்கொளும்படி கூறியுள்ளாராம்.

கஜா புயல் நிவாரண நிதி ரூ. 1,01,00,000 வழங்குவதாக தயாரிப்பு நிறுவனமான லைகா குழுமம் அறிவித்துள்ளது.

புயல் மீட்சிக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கவிஞர் வைரமுத்து 5 லட்ச ரூபாய் வழங்கினார்.

விஜய்சேதுபதிம் சிவகார்த்திகேயன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட இன்னும் பல திரையுலக பிரபலங்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்கள்.