முதல் சுற்றுக்கு வந்த இறுதிச்சுற்று..!

 

ரொம்ப நாளாக ஆளையே காணோமே, நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு விட்டாரா மாதவன் என கலங்கவேண்டாம். இப்போது தமிழ், இந்தி என இரு மொழிகளில் தயாராகவிருக்கும் ‘இறுதிச்சுற்று’ என்றபடத்தில் நடித்து வருகிறார் மாதவன். தமிழில் ‘துரோகி’ படத்தை இயக்கிய சுதா கே.பிரசாத் தான் இந்தப்படத்தை இயக்குகிறார்.

தமிழ், இந்தி (சாலா கதூஷ்) என இரு மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் மாதவனுக்கு பாக்ஸர் கேரக்டர். அதனால் இதற்காக கடந்த பல மாதங்களாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஆண்டனி, அலெக்ஸாண்டர் என இரண்டு வீரர்களிடம் குத்துச்சண்டை பயிற்சி எடுத்திருக்கிறார் மாதவன். இந்தப்படத்தில் ஒரிஜினல் குத்துச்சண்டை வீரர்களும் நடித்திருக்கின்றனர்.