அதர்வா-மேகா ஆகாஷை ஜோடி சேர்த்த ‘இவன் தந்திரன்’ இயக்குனர்..!

மனதை வருடும் மெல்லிய படங்களை எப்படி கொடுக்க வேண்டும் என்ற வித்தையை அறிந்தவர் தான் இயக்குனர் கண்ணன். அதுமட்டுமல்ல, இதற்கு முன் தான் இயக்கிய ‘இவன் தந்திரன்’ படத்தை ஆக்சன் படமாக டெக்னாலஜி அம்சங்குடன் கலந்து கமர்ஷியலாகவும் கொடுத்து ஆச்சர்யப்படுத்தியவர்.. அடுத்ததாக அதர்வாவுடன் அவர் இணையும் அடுத்த படம் நல்ல அதிர்வலைகளோடு துவங்கிருக்கிறது.

அதர்வா, கண்ணன் காம்போவில் உருவாகும் இந்த ஆக்‌ஷன் படம்.. இயக்குனர் ஆர் கண்ணனின் மசாலா பிக்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப்படத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில், தனுஷ் ஜோடியாக நடிக்கும் மேகா ஆகாஷ் அதர்வாவின் ஜோடியாக நடிக்கிறார்.

“அதர்வா, மேகா ஆகாஷ் ஜோடியை திரையில் பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களும், இளைஞர்களும் புதுமையாக உணர்வார்கள். முன்னணி நடிகையாக வர அத்தனை தகுதிகளும் மேகா ஆகாஷுக்கு இருக்கிறது. அவரை எங்கள் படத்தில் நாயகியாக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது” என்கிறார் இயக்குனர் கண்ணன்.