தனி ஒருவனுக்கு ‘U’ சான்றிதழ்..!

ஜெயம்ரவியும் அவரது அண்ணன் (மோகன்) ராஜாவும் ஐந்து வருடங்களுக்கு பிறகு இணையும் படம் என்பதாலேயோ அல்லது ஜெயம் ரவியும் நயன்தாராவும் முதன்முதலாக இணைந்து நடிக்கும் படம் என்பதாலேயோ ரசிகர்கள் மத்தியில் ‘தனி ஒருவன்’ படம் தனிக்கவனம் பெற்றிருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் பரபர ஆக்சன் டிரெய்லரும் ஜெயம்ரவியின் போலீஸ் கெட்டப்பும் இன்னும் ஆர்வத்தை தூண்டத்தான் செய்கின்றன.. தவிர நயன்தாராவும் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார். சாக்லேட் அங்கிள் அரவிந்த்சாமி வில்லனாக நடித்துள்ள இந்தப்படத்திற்கு “ஹிப் ஹாப் தமிழா” இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘U’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.