பட்டியலுக்குள் அடங்காத மெர்சல் திரைப்படத்தின் சாதனைகள் *

mersal

விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த மெர்சல் திரைப்படம் மாபெரும் வெற்றியையும் ,வசூல் சாதனையும் படைத்தது. தென்னிந்திய சினிமாவில் ஒரு நாளில் அதிகமாக பார்க்கப்பட்ட பட டீசர்களில் மெர்சல் டீசர் முதல் இடத்தை பிடித்துள்ளது டீசர் 24 மணி நேரத்தில் 11.21 மில்லியன் பார்வைகளை தொட்டு சாதனை படைத்துள்ளது .

தென்னிந்திய அளவில் அனைவராலும் யூடியூப்பில் பார்க்கப்பட்ட விடீயோஸ் மற்றும் அதிக லைக்ஸ் பெற்ற வீடியோக்களில் மெர்சல் படம் முதல் இடத்தை பெற்றுள்ளது. தமிழ் நடிகர்களில் யூடியூப்பில் 25 வீடியோஸ் ஒரு லட்சம் லைக்ஸ் பெற்றுள்ள ஒரே நடிகர் விஜய் மட்டுமே. இதில் மெர்சல் திரைப்படத்தின் 16 வீடியோ ஒரு லட்சம் லைக்ஸ் பெற்றுள்ளது.

*அதிக அளவில் பார்க்கப்பட்ட லிரிக்ஸ் சாங்

*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட லிரிக்ஸ் சாங்

*அதிக அளவில் பார்க்கப்பட்ட ஆடியோ டீஸர்

*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட வீடியோ சாங்

*மிக விரைவில் பார்க்கப்பட்ட 20 மில்லியன் வீடியோ சாங்

*அதிக அளவில் லைக் செய்யப்பட்ட ப்ரோமோ சாங்

தளபதி விஜயின் கடைசி 10 படங்களில் கேரளா பாக்ஸ் ஆபீஸ் கலெக்க்ஷன்களில் மெர்சல் படமானது ரூ.21.9 கோடி வசூல் பெற்று முதல் இடத்தில் உள்ளது.

மெர்சல் தமிழ் மொழி வீடியோ சாங்ஸ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த அதிரிந்தி வீடியோ சாங்ஸ் இரண்டும் சேர்ந்து 1 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது.

மிக விரைவில் யூடியூப்பில் பார்க்கப்பட்ட 10 மில்லியன் வீடியோ சாங்ஸ் லிஸ்டில் ஆளப்போறன் தமிழன் பாடல் 20 நாளில் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. உலக அளவில் மிக விரைவில் 1.5 லட்சம் லைக்ஸ் பெற்ற டீசரில் மெர்சல் படத்தின் டீஸர் முதல் இடத்தில் உள்ளது மற்றும் ஆளப்போறன் தமிழன் ஆடியோ டீஸர் தென்னிந்திய அளவில் 1.5 லட்சம் லைக்ஸ் பெற்று முதல் இடம் வகிக்கிறது.

ஆளப்போறன் தமிழன் லிரிக் வீடியோ சாங் மற்றும் வீடியோ சாங் மிக விரைவில் 1.5 லட்சம் லைக்ஸ் பெற்ற பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் ரிலீஸ் படங்களில் மெர்சல் 23 வது RANK யை பெற்றுள்ளது. தெறி திரைப்படம் இன்டர்நேஷனல் மார்க்கெட் வசூலில் (US) $7.2 மில்லியன் பெற்று 50வது RANK ல் இருந்தது.இதனை மெர்சல் படம் முறியடித்து (US)$ 11.89 பெற்று 23 வது இடத்தில உள்ளது.

பிரான்சில் மெர்சல் திரைப்படம் 32471 ENTRIES பெற்று மற்ற தமிழ் படங்களை விட முதல் இடத்தில் உள்ளது. சென்னை சிட்டி 9 நாள் கலெக்ஷன்ஸ் ல் 9.23 கோடி வசூல் பெற்று 7 வது இடத்தில் உள்ளது.

இப்படி இன்னும் சாதனை பட்டியல் நீள்கிறது.