இது விஜய் ஸ்டைல்..!

vijay 62 film pooja

ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்சனில் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களை தொடர்ந்து மூன்றாவது படத்தில் வெடிகுண்டாக வெடிக்க தயாராகிவிட்டார் நடிகர் விஜய். தனது 62 படமாக உருவாகும் இந்தப்படத்தின் துவக்கவிழாவில் தானே கிளாப் அடித்து படத்தின் முதல் காட்சியை துவங்கி வைத்துள்ளார் விஜய்.

இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார். மெர்சலை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் இதில் விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். பிரபல மலையாள ஒளிப்பதிவாளரான கிரிஷ் கங்காதரன் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப்படத்தை வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வதாக முருகதாஸ் அறிவித்துள்ளார்.