சேலை கட்டினார் தலைவாசல் விஜய்..! வேட்டி கட்டினார் தேவதர்ஷினி..!!

இந்த உலகில் ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க. அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத் தனமா அடாவடியா இருப்பாங்க.

இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும்ங்கிறதை படிக்கிறப்பவே அட புதுசா இருக்கேன்னு நமக்கு தோணுதில்லையா.. இப்படி ஒரு கதையைத்தான் யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லிருக்காராம் இயக்குனர்  ஜீன்ஸ்..

இந்த படத்துக்கு என்ன பேர் வைத்திருக்கிறார்கள் தெரியுமா..? ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்று.. “லட்டுன்றது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் தான் பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்தது தான் லட்டு. அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம்” என்கிறார் இந்தப்படத்தின் இயக்குனர் ஜீன்ஸ்..

இந்தப்படத்தில் கதாநாயகனாக கிரண் மை(பெண்) நடித்திருக்கிறார். கதாநாயகியாக இயக்குனர் ஜீன்ஸ் (ஆண்) நடித்திருக்கிறார்.  மற்றும் தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் முக்கியமான வில்லன்(!) வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார்.