இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கிய தடையற தாக்க படம் தான் அருண் விஜய்க்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம்.. அந்தப்படத்திற்குப்பின் தான் அருண்விஜய்க்கு ஒரு கமர்ஷியல் வேல்யூ கிடைத்தது என்றே சொல்லலாம்.. தற்போது அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம்-23’ படம் நன்றாக ஓடியது.
இதை தொடர்ந்து தற்போது சில வருடங்கள் கழித்து மீண்டும் மகிழ்திருமேனி இயக்கத்தில் இன்னொரு படத்தில் நடிக்கிறார் அருண்விஜய்.. இந்தப்படத்திற்கு தடம் என பெயர் வைத்துள்ளார்கள்.. இந்தப்படத்தின் பூஜையில் இயக்குனர் ஹரி கலந்துகொண்டு கிளாப் அடித்து படத்தை துவங்கிவைத்தார். ‘குற்றம்-23’ படத்தை தயாரித்த இந்தர் குமார் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறார்.