ஆயிரம் படம் கண்ட அபூர்வ ஞானி – முழங்கட்டும் ‘தாரை தப்பட்டை’


பாலாவின் படங்களுக்கான டைட்டில்கள் எப்போதுமே வசீகரமானவை.. கவனம் ஈர்க்க கூடியவை. இப்போது சசிகுமாரை வைத்து தான் இயக்கும் புதிய படத்திற்கு ‘தாரை தப்பட்டை’ என பெயர்வைத்து வழக்கம்போல வியப்பலைகளை ஏற்படுத்தியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைக்கிறார். ஆனால் அதைவிட நம் கவனத்தை ஈர்ப்பது, இது இசைஞானி இசையமைக்கும் 1000-ஆவது படம் என்பதுதான். இசையுலகில் இது இது யாரும் எட்டமுடியாத சாதனை.. இசைஞானியின் மகுடத்தில் மேலும் பதிக்கப்பட்ட ஒரு வைரம். அது பாலாவின் படமாக அமைந்துவிட்டது தான் சிறப்பு.

கரகாட்டத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள கதை என்பதால் இசைஞானி விளையாடுவதற்கு இதில் தாராள இடம் தந்திருக்கிறார் பாலா. அதற்கேற்ற மாதிரி இந்தப்படத்திற்காக சுடச்சுட பனிரெண்டு பாடல்களை பாலாவிடம் போட்டுக் கொடுத்துள்ளார் இசைஞானி.

இதுவரை நமது பாரம்பரிய கலைகள் எல்லாம் படமாக உருவாகும்போது இசைஞானியின் பங்களிப்பு தனது கடமையை சரியாகவே செய்து வந்திருக்கிறது. பாலா படத்திலும் அது தொடரவே செய்யும்.