பதட்டத்தில் இருக்கும் ‘தரமணி’ ஹீரோ..!

taramani hero

தடை பல கடந்து, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது ‘தரமணி’.. இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் இயக்குனர் ராம். தங்க மீன்கள் படத்திற்கு பிறகு வெளியாகும் ராமின் படம் என்பதால் எதிர்பார்ப்பு கூடவே செய்திருக்கிறது.. இயக்குனர் ராம் கூலாக இருக்கிறார்.. ஆனால் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கோ..?

எந்த நடிகருக்கும் தனது முதல் படம் கற்று பாடமும் அது கொடுக்கும் அனுபவமும் மறக்கமுடியாதவை. அந்த நடிகனின் உற்சாகமும், பதட்டமும் அந்தப்பட ரிலீஸின் பொழுது உச்சத்தில் இருப்பது வாடிக்கை தான்.. ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவிக்கும் அது பொருந்தும் தானே. அப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் இருக்கிறார் வசந்த் ரவி.

இது குறித்து அவர் பேசுகையில், ”இந்தப்படத்தில் ஒரு கால்சென்டர் ஊழியராக நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என இயக்குனரிடம் கேட்டேன். அதற்கு, எந்த பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார் ராம். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் எனக்கு அவர் நிறைய கற்றுக்கொடுத்தார்” என இயக்குனர் ராம் குறித்து சிலாகித்து பேசுகிறார் வசந்த் ரவி.