மீண்டும் ரிலீஸானது தரமணி..!

taramani re release

இன்றைய சூழலில் ஒருசில படங்கள் நன்றாக இருக்கிறது என மெதுவாக மவுத் டாக் பரவுவதற்குள், அடுத்த வார ரிலீஸ் படங்கள் காரணமாக தியேட்டர்களை விட்டு தூக்கப்படும் அவலம் அவ்வப்போது நடக்கும். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இயக்குனர் ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான ‘தரமணி’ படம் அந்த வகையை சேர்ந்ததுதான்..

இப்படம் தாமதமாக வெளியானாலும், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கு அதிகமான பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. மூன்று வாரங்களுக்கும் மேல் ஓடிய படம். புதிய படங்களின் வருகை காரணமாக இந்தப் படத்தை தூக்க வேண்டியிருந்தது.

தற்போது இந்தப்படம் மீண்டும் இன்று வெளியாகியுள்ளது. காரணம் தற்போது வரி விதிப்புக்கு எதிராக தொடரப்பட்ட வேலை நிறுத்தத்தால் புதிய படங்கள் வெளியாவது நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாரமும் புதிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில், ‘தரமணி’ மீண்டும் திரையரங்கில் திரையிடப்பட இருக்கிறது.