கார்த்திக்கு ஜோடியாக ஹாட்ரிக் அடித்தார் தமன்னா..!


 

 

தெலுங்கு சீனியர் நாகார்ஜூனாவுடன், தமிழில் முன்னணியில் இருக்கும் கார்த்தி இணைந்து நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக ஸ்ருதிஹாசன் கூறியது ஒரு பக்கம் அதிர்ச்சி தான்.. அதுகுறித்த வழக்கு ஒருபக்கம் இருந்தாலும், இப்போது அந்த இடத்தை நிரப்பும் வகையில் சரியான நபராக தமன்னா கைகொடுத்திருக்கிறார்.

 ஏற்கனவே ‘பையா’, ‘சிறுத்தை’ படங்களில் கார்த்தியுடன் நடித்த தமன்னாவுக்கு இது ஹாட்ரிக் சான்ஸ். தவிர ஜெயசுதா, விவேக், மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த மல்டி ஸ்டாரர் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்குகிறார்.