தமிழ்ப்பெண்கள் மாடலிங் துறையில் நுழையவே கூடாதா.? – கொதிக்கும் மீரா மிதுன்

மீராமிதுன் எட்டு தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர். சென்னையை சேர்ந்த இவர் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர். படிப்பிற்கு பின் மாடலிங் துறையில் நுழைந்து மிஸ் சவுத் இந்தியா, மிஸ் தமிழ்நாடு உட்பட நான்கு அழகி பட்டங்களை வென்றவர்.

தற்போது மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரில் தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமாக அழகி போட்டி நடத்த முற்பட்டுள்ளார். இந்த நிலையில் இப்போட்டியை நடத்தக்கூடாது என தனக்கு கொலைமிரட்டல்கள் வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.

நான் படிக்கும் காலத்தில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தேன் இந்தத்துறை கார்பரேட்கள் கொடிகட்டி பறக்கும் துறை இதில பெண்கள் வளர்வது மிகவும் கடினம். தமிழ்ப்பெண்ணான நான் மிகவும் கஷ்டப்பட்டே பல சாதனைகள் செய்தேன். இதில் ஆர்வம் உள்ள தமிழ்ப்பெண்கள் அந்த துனபங்கள் படக்கூடாது எனும் நோக்கில் தான் மிஸ் தமிழ்நாடு திவா எனும் பெயரை முறையாக டிரேட்மார்க் செய்து தமிழ்ப்பெண்களுக்கென பிரத்யேகமான ஒரு போட்டியை நடத்த முற்பட்டேன்.

இந்த துறையின் ஜாம்பவான்கள், கார்பரேட் மேலும் என்னுடன் நட்பாக பழகியவர்களும் இப்போட்டியை நடத்தக் கூடாது என கடும் நெருக்கடி தந்தனர். முன்னர் என்னுடன் வேலை பார்த்தவரும் கொச்சி மாடலிங் துறையை சேர்ந்தவருமான அஜித் ரவி, ஜோ மைக்கேல் பிரவீன் ஆகிய இருவரிடமிருந்து தொடர்ந்து கொலைமிரட்டல்கள் வந்தது. அதனாலேயே நான் போலிஸீடம் முறையிட்டேன்.

ஆனாலும் இதோ இன்று ஜூன்-3 என்னால் நினைத்தபடி இந்த போட்டியை நடத்த முடியவில்லை.. எந்த ஸ்டார் ஹோட்டலை அணுகி இந்த போட்டியை நடத்த இடம் கேட்டாலும், தங்களுக்கு மிரட்டல் வருவதாக கூறி எங்களுக்கு இடம் தர மறுக்கின்றனர்.. தமிழ்ப்பெண்கள் மாடலிங் துறையில் சாதித்து விட கூடாது என ஒரு கூட்டமே பணபலத்துடன் செயல்பட்டு வருகின்றனர். இதே போட்டியை நான் பெங்களூரில் வைத்து எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தியிருக்க முடியும். ஆனால் இங்கே தமிழ்நாட்டில் நடத்திக்கட்டுவது தான் தமிழ்ப்பெண்களான எங்களுக்கு பெருமை. விரைவிலேயே அதுவும் இந்த மாதத்திலேயே இந்த போட்டியை நான் நடத்தி காட்டுகிறேன்” என சூளுரை செய்தார் மீரா மிதுன்.