தமன்னாவை ஆச்சர்யப்பட வைத்த ஒரே ஒரு கேள்வி..!

tamanna

பாகுபலி படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த தமன்னா சரித்திர புகழ்பெற்றுவிட்டார் என்பது வேறு விஷயம். ஆனால் பாகுபலி படத்தில் நடித்ததனாலேயே அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரே ஒரு கேள்வியை அவரிடம் கேட்டு திணறடிக்கிறார்களாம்.

வேறென்ன தமிழ்நாட்டையே மீம்ஸ்களால் கலக்கிவரும் ‘கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார்..?” என்கிற கேள்விதான் அது.. இந்த கேள்விக்கு பதில் சொலும் உரிமை தனக்கு இல்லையென்றாலும் ‘பாகுபலி’ படம் மக்கள் மத்தியில் இவ்வளவு ரீச்சாகி இருப்பதை பார்க்கும்போது மிகுந்த சந்தோசமாக இருக்கிறது என்கிறார் தமன்னா..