அதர்வாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் ‘ஈட்டி’

தற்போது ‘இரும்புக்குதிரை’ படத்தில் நடித்துவரும் அதர்வா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப்படத்தை வெற்றிமாறன் பள்ளியில் இருந்து மற்றுமொரு மாணவரான, ‘ஆடுகளம்’ உட்பட 10 வருட காலம் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி அரசு என்பவர் இயக்குகிறார்.

இந்தப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக வருகிறார். “இரண்டு வருடத்துக்கு முன்னாடி அதர்வாவை மனசுல வச்சு உருவாக்கின கதைதான் ‘ஈட்டி’. இந்தப் படத்தோட கதையும், களமும் தமிழ் சினிமாவுக்கு புதுசா இருக்கும்! இன்னைக்கு இந்தியா பல துறைகள்ல முன்னேறியிருக்கு. ஆனா, ஸ்போர்ட்ஸை பொறுத்தவரை இன்னும் பின்தங்கிதான் இருக்கு! அந்த வகையில் ஸ்போர்ட்ஸை ஊக்குவிக்கிற மாதிரியான ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்திருக்கோம்” என்கிறார் ரவி அரசு

குறிப்பாக தமிழ்நாட்டு விளையாட்டு துறை கவனிக்கிற மாதிரியான ஒரு படமாக ’ஈட்டி’ அமையும் என்கிறார் ரவி அரசு நம்பிக்கையுடன். அதர்வாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ புகழ் ஸ்ரீதிவ்யா. படத்துக்கு இசை அமைக்கும் ஜி.வி.பிரகாஷ் அதற்குள்ளாகவே மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்திருக்கிறாராம். ஜனவரியில் இருந்து இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published.

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>