ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை எகிற வைக்கும் கடைக்குட்டி சிங்கம் சர்ப்பிரைஸ்.!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களான சூர்யா, கார்த்தி தற்போது முதல் முறையாக இணைந்து பணியாற்றியுள்ளனர். சூர்யாவின் 2D எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் பாண்டியராஜ் இயக்கத்தில் கார்த்தி, கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர், அர்த்தனா பினு, சத்யராஜ், பானுப்பிரியா, சூரி மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 13-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் கார்த்தி, சூர்யா ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக முக நூலில் ரசிகர்களுடன் உரையாடிய போது கூறியுள்ளார்.

அதாவது இந்த படத்தில் நடிகர் சூர்யா கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துள்ளாராம். அது நிச்சயம் சூர்யா ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். சூர்யா ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.