சுட்டுப்பிடிக்க உத்தரவு பர்ஸ்ட் லுக் வெளியானது..!

S-P-U first look

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா தற்போது இயக்கிவரும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இந்தப்படத்தில், இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்தப்படத்தின் மூலம் இயக்குனர் சுசீந்திரனும் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான ‘க்ரைம்’ நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே இந்தப்படத்தின் கதையாம். தற்போது இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.