கால்பந்து சாம்பியனை உருவாக்குகிறார் சுசீந்திரன்..!

“வெண்ணிலா கபடி குழு” , ” ஜீவா ” போன்ற விளையாட்டை மையமாக கொண்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுசீந்திரன் தற்போது ” சாம்பியன் ” என்ற புட்பாலை மையமாக கொண்ட படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. படப்பிடிப்பை கேமராவை இயக்கி விஷாலின் தந்தையும் தயாரிப்பாளருமான ஜி.கே.ரெட்டி துவக்கிவைத்தார். இதில் நடிகர், நடிகையர் என படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். ரோஷன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் மிருணாளினி கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.கே.ரெட்டி, அஞ்சாதே நரேன் , ஆர்கே.சுரேஷ் , ஜெயபிரகாஷ், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

அரோல் குரோலி இசையில் , சுஜித் சாரங் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தில் பிரபல கால் பந்து விளையாட்டு வீரர் விஜயன் படத்தை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்குவகிக்கிறார். டிசம்பர் வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.