குப்பத்து ராஜா பாடலுக்கு சூர்யா பாராட்டு

ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன் நடிப்பில் உருவாகியுள்ள படம் குப்பத்து ராஜா டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் இந்த படத்தில் கதாநாயகியாக பலக் லால்வனி நடிக்க முக்கிய வேடத்தில் யோகிபாபு, எம்.எஸ்.பாஸ்கர் நடித்துள்ளனர். இந்த படம் ஏப்ரல் 5ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான இந்தப்படத்தின் “எங்க ஏரியா எங்களுது” என்கிற பாடல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடலை பார்த்து ரசித்த நடிகர் சூர்யா, “ஹை எனர்ஜி டான்ஸ்” என பாராட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த பாடலை ஆண்டனி தாசன், பிரதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஷர்மிளா ஆகியோர் பாடியுள்ளனர்.