உலக திரைப்பட விழாவில் பாராட்டுக்களை குவித்த சூர்யாவின் ’24’..!

24

சூர்யா நடிப்பில் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் வெளிவந்து வெற்றிபெற்ற ‘24’. திரைப்படம் நேற்று முன்தினம் சீனாவில் உள்ள சீயோன் என்னும் இடத்தில் வைத்து மிகபிரம்மாண்டமாக நடைபெற்ற 3ஆவது சில்க் ரோடு உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. 2016 ஆம் ஆண்டிற்கான மீடியா ஹானர் போட்டி பிரிவில் பங்கேற்ற இப்படம் திரையிடப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இதை போன்ற ஒரு கதை களத்தை தேர்ந்தெடுத்து இவ்வளவு நேர்த்தியாக படத்தை எடுத்துள்ளீர்கள் என்று மிகப்பெரிய அளவில் பாராட்டினர். மொத்தம் உள்ள ஐந்து பிரிவுகளில் 24 திரைப்படம் சிறந்த படம் , சிறந்த நடிகருக்கான விருது என இரண்டு பிரிவுகளில் கலந்துகொண்டது. போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த 675 படங்களில் 24 திரைப்படம் இரண்டு பிரிவுகளில் பங்கேற்றது. விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் ஜாக்கி சான் வழங்கினார்.