கே.வி.ஆனந்த் படத்திற்காக சூர்யா-மோகன்லால் அதிரடி கூட்டணி..!

mohanlal-surya

இன்றுள்ள இளம் முன்னணி ஹீரோக்களுக்கு மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் மோகன்லாலுடன் நடிக்கவேண்டும் என்கிற ஆசை இருக்கவே செய்யும்.. அதேபோல மோகன்லாலும் இளம் ஹீரோக்களின் படங்களில் இணைந்து நடிப்பதில் எந்தவித ஈகோவும் பார்க்காதவர் தான்..

அப்படி ஒரு ஆசை விஜய்க்கு ‘ஜில்லா’ படம் மூலம் நிறைவேறியது போல இப்போது சூர்யாவும் மோகன்லாலுடன் முதன்முறையாக இணைந்து நடிக்கும் அதிசயம் அரங்கேறப்போகிறது..

ஆம்..கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா நடிக்கும் படத்தில் மோகன்லாலும் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.