காப்பான் படக்குழுவினருக்கு சூர்யா அளித்த விருந்து

சூர்யா – கே.வி.ஆனந்த் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமான காப்பானில் ஆர்யா, மோகன்லால், சயிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அயன், மாற்றான் ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவை வைத்து ‘காப்பான்’ படத்தை இயக்கி வருகிறார் கே.வி.ஆனந்த். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. மோகன்லால், ஆர்யா, சயிஷா ஆகியோர் உடன் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் பெரும் பகுதி ஷூட்டிங் நிறைவு பெற்றது. இனி பாடல் காட்சிகள் மட்டுமே எடுக்கப்பட உள்ளன. இந்நிலையில் படக்குழுவினருக்கு பிரியாணி ட்ரீட் கொடுத்துள்ளர் நடிகர் சூர்யா. அதனை அவரே படக்குழுவினருக்கு பரிமாறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் சூர்யா ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.