மூன்றே நாளில் 50 கோடி வசூலை தாண்டிய ‘சி-3’..!

si 3 collection

சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகும் படங்கள் எப்போதும் ரசிகர்களின் இரண்டரை மணி நேர பொழுதுபோக்கிற்கு உத்தரவாதம் தருபவை.. அதேபோல வசூலிலும் சோடை போனதில்லை என்பதுதான் முந்தைய வரலாறு… ஆனால் இவர்களின் ‘சி-3’ படத்தை அசைத்து பார்க்கும் விதமாக இயற்கை பல தடைகளை ஏற்படுத்தியது போக, தமிழ் ராக்கர்ஸ் போன்ற சில கருங்காலிகளும் சவால்விட்டுத்தான் பார்த்தார்கள்..

ஆனால் சிங்கம் என்றைக்கும் சிங்கம் தான் என வசூலில் பட்டையை கிளப்பியபடி நிரூபித்து வருகிறது கடந்த வியாழன் அன்று வெளியான சூர்யாவின் ‘சி-3’. ஆம். 50 கோடி வசூல் என்கிற கடின இலக்கை மூன்றே நாட்களில் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது இந்த மூன்றாவது சிங்கம்.

படம் வெளியான முதல் நாளே 20 கோடியையும் 2ஆம் நாளில் 14 கோடியையும் வசூலித்த இந்தப்படம் இதன் மூலம் விஜய்யின் ‘பைரவா’ படத்தின் முதல் நாள் வசூல் ரெக்கார்டை முறியடித்து, படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஏற்கனவே சொன்னதுபோல ரஜினியின் ‘கபாலி’ வசூலான 21.5 கோடிக்கு அடுத்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது சிங்கம்.. இதே ரீதியில் வசூல் தொடரும் பட்சத்தில்; விரைவில் பைரவா’ படத்தின் கலெக்சன் ரெக்கார்டான 110 கோடி என்கிற இலக்கை இந்தப்படம் எளிதாக ஓவர்டேக் ஏயும் என்பதும் உறுதி.

கேரளாவில் மட்டும் கடந்த நான்கு நாட்களில் 6.28 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.. இது கேரளாவில் சூர்யாவின் மாஸ் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவதைத்தான் காட்டுகிறது. அதேபோல கர்நாடகாவில் இதுவரை 3.48 கோடி வசூலித்து அங்கேயும் கபாலிக்கு அடுத்த இடத்தை பிடித்துள்ளது.

தற்போது தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழலிலேயே இந்த சாதனையை நிகழ்த்தியுள ‘சி-3’, ஏதேனும் பண்டிகை நாட்களிலோ அல்லது, சுமூகமான சூழல் நிலவும் நாட்களிலோ வெளியாகி இருந்தால் வசூல் இன்னும் எகிறி இருக்கும் என்கிறது விநியோகஸ்தர் தரப்பு..