சூர்யாவின் அடுத்த படம் எது ; விரைவில் அறிவிப்பு..!

surya 2
தற்போது ஹரி இயக்கத்தில் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‘S-3’யில் நடித்து வருகிறார் சூர்யா. சிங்கம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அதைவிட அதிக சந்தோஷத்தை ரசிகர்களுக்கு தரும் விதமாக ஹரி-சூர்யா கூட்டணி ராப்பகலாக இந்தப்படத்திற்காக உழைத்து வருகிறது..

இந்தநிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என ஆளாளுக்கு ஆருடம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.. சூர்யா படத்தை ஒதுக்கிவைத்து விட்டுத்தானே ‘கபாலி’யை இயக்க பா.ரஞ்சித் போனார். இப்போது ‘கபாலி’ ரிலீசானதால் அடுத்து சூர்யா படத்தை அவர்தான் இயக்குவார் என்கிறார்கள் சிலர்.. ஆனால் அவரும் கூட சூர்யா படத்தை இயக்குகிறேன் என்றுதான் சொல்லியிருகிறாரே தவிர, அதுதான் சூர்யாவின் அடுத்த படமா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

இன்னொரு பக்கம் கார்த்திக்கு ‘கொம்பன்’ என்கிற சூப்பர்ஹிட் படத்தை கொடுத்த முத்தையாவும் சூர்யாவுக்கான கதையை தயார் செய்து அவரிடம் ஓகே வாங்கிவிட்டார்.. அதனால் சூர்யாவின் அடுத்த படத்தை அவர்தான் இயக்குவார் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் இந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யாவின் நண்பரும், 2டி நிறுவனத்தின் நிர்வாகியுமான ராஜசேகர் பாண்டியன், “சூர்யாவின் அடுத்த படம் குறித்து வரும் யூகமான தகவல்களில் உண்மை இல்லை.. விரைவில் அதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என கூறியுள்ளார்.