லண்டனில் பூஜையுடன் துவங்கிய ‘சூர்யா-37′

surya 37 strats

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக கே.வி.ஆனந்தும் சூர்யாவும் இணையும் சூர்யாவின் 37வது படத்தில் பட்ஜெட்டில் மட்டும் பிரமாண்டம் காட்டாமல் நட்சத்திர தேர்விலும் பிரமாண்டம் காட்டியுள்ளார்கள். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் மோகன்லால், சமுத்திரக்கனி, தெலுங்கு நடிகர் அல்லு சிரிஷ், பிரபல இந்தி நடிகர் போமன் இரானி வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். ஜிகர்தண்டா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கேவ் மிக் யூ ஆரி ஒளிப்பதிவை மேற்கொள்ள, கலை இயக்குநராக கிரண் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது இந்த படத்தின் பூஜை நேற்று லண்டனில் நடந்தது. இந்த பூஜையில் சூர்யா, சாயிஷா, கே.வி.ஆனந்த் லைகா நிறுவனத்தின் நிறுவனர் சுபாஷ்கரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.