சதுரங்க வேட்டை படத்தின் மூலம், நமது மக்களில் சிலர் பேராசையால் எப்படியெல்லாம் ஏமாந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டு காட்டியவர் இயக்குனர் வினோத்.. கலகலப்பான காமெடியுடன், விழிப்புணர்வு ஊட்டும் விதமாக அவர் உருவாக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெறவே, அதை தொடர்ந்து வினோத்திற்கு பல இடங்களில் இருந்து படம் இயக்கும் வாய்ப்புகள் வந்தன.
ஆனால் அவரோ சூர்யாவுக்காக பக்காவாக ஒரு கதையை தயார் செய்து வைத்திருந்தார். இந்த தகவலை அறிந்த சூர்யா, தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் தான் நடித்துக்கொண்டிருக்கும் ‘24’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெறுவதால், வினோத்தை கதைசொல்ல மும்பைக்கே வரச்சொன்னார்.
ப்ளைட் பிடித்து மும்பை சென்ற வினோத்திடம், ஒரே ஒரு நிமிடம் மட்டுமே கதை கேட்ட சூர்யா, “இந்த புராஜக்ட் நாம பண்றோம்” என உடனே ஓகே சொல்லிவிட்டார். வினோத்தின் ‘சதுரங்க வேட்டை’ படத்தை வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தான் இந்தப்படத்தையும் தயாரிக்கிறது.