வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு சூர்யா-கார்த்தி உதவிக்கரம்..!

surya-karthi

பொதுவாக எந்த ஒரு இயற்கை பேரிடர் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் உதவிக்கரம் நீள்வது என்றால் அது கலையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் குடும்பத்தில் இருந்துதான். அவரது வழியிலேயே அவரது புதல்வர்களான சூர்யாவும் கார்த்தியும் இதை தங்களது கடமையாகவே செய்து வருகிறார்கள்.

கடந்த சில தினங்களாக கேரளாவில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவால் எட்டு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் துயரத்துக்குள்ளாகியுள்ளது .கேரளா அரசு மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டு வருகிறது இந்நிலையில் கேரளா முதல்வர் மாண்புமிகு பிணரயி விஜயன் அவர்கள் நிவாரண நிதி அளித்து உதவுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதை அறிந்த நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 25 லட்சம் ரூபாய் கேரளா முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறார்கள். எப்பொழுதும் சூர்யா கார்த்தி -க்கு கேரளா மக்களிடம் ஒரு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது, கடவுளின் தேசம் என்று புகழப்படும் கேரளாவில் இந்நிலையை கண்டு மனம்வருந்துகிறோம், வெகுவிரைவில் இயல்புநிலை திரும்ப பிரார்த்திக்கிறோம்.என கூறியுள்ளார்கள்.